/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் பயிலரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் பயிலரங்கம்
ADDED : ஆக 07, 2025 02:40 AM

கள்ளக்குறிச்சி,:ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிலரங்கத்திற்கு, கல்லுாரி நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக், துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பார்த்திபன் வரவேற்றார்.
கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பிரவீனா, கணிதத்துறை தலைவர் நிதிஷா வாழ்த்துரை வழங்கினர். விழுப்புரம் பேக்கரி பயிற்சியாளர் முத்தமிழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வீட்டிலேயே குறைந்த விலையில் கேக், பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தார். பயிலரங்கத்தில் 300க்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உதவி பேராசிரியர்கள் பிந்து, பன்னீர்செல்வம், கோமதி, சுபலட்சுமி, பரசுராமன், அழகுவேலன், ஐஸ்வர்யா, ஜெனிப்பிரியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியை சடையம்மாள் நன்றி கூறினார்.