/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
நுகர்வோர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : செப் 21, 2025 04:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட நுகர்வோர் குறைகேட்பு ஆணைய தலைவர் சதிஷ்குமார், உறுப்பினர் மீராமொகைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், சி.இ.ஓ., கார்த்திகா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் வசந்தலட்சுமி, ஆர்.டி.ஓ., முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினர். பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளில் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் வினோத்பாபு நன்றி கூறினார்.