/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடைகளில் சுகாதார துறையினர் சோதனை
/
கடைகளில் சுகாதார துறையினர் சோதனை
ADDED : நவ 18, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தினர்.
சின்னசேலத்தில் கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறையினர் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து சோதனை மேற்கொண்டனர்.
சுகதார ஆய்வாளர் ராஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கடைவீதி, முங்கில்பாடி பகுதிகளில் உள்ள கடைகளில் விதிகளை மீறி குட்கா பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.