/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பருத்தியில் ஊடுபயிர் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்! தேவையான இடுபொருட்கள் இருப்பு வைப்பு
/
பருத்தியில் ஊடுபயிர் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்! தேவையான இடுபொருட்கள் இருப்பு வைப்பு
பருத்தியில் ஊடுபயிர் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்! தேவையான இடுபொருட்கள் இருப்பு வைப்பு
பருத்தியில் ஊடுபயிர் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்! தேவையான இடுபொருட்கள் இருப்பு வைப்பு
ADDED : அக் 11, 2024 11:09 PM
கள்ளக்குறிச்சி : பருத்தி சாகுபடியில் ஊடுபயிர் சாகுபடி செய்தால் கூடுதல் விளைச்சலுடன் வருமானம் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு தோறும் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 'பஞ்சு' மற்றும் விதை உற்பத்தி என இரு முறைகளில், சாகுபடி செய்யப்படுகிறது.
பஞ்சு கொள்முதலுக்காக ஆண்டுதோறும் கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது.
இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் 'பஞ்சு' வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
விதையை முக்கிய நோக்கமாக கொண்டு இறவையில் வீரிய ரக ஒட்டு பருத்தியும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடிக்கு, தனியார் விதை நிறுவனங்கள் விதை, உரம், பூச்சு மருந்துகள் வழங்குகின்றன. வீரிய ரக ஒட்டு பருத்தியில் பஞ்சு விளைந்ததும் அதிலிருந்து விதை, பஞ்சுகளை தனி தனியாக பிரித்து தனியார் விதை நிறுவனங்களே நேரடியாக கொள்முதல் செய்கின்றன.
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்வதால் கூடுதல் விளைச்சல் மற்றும் வருமானம் பெறலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் பருத்தி சாகுபடி விவசாயிகளால் பயிரிடப்படும் முக்கிய பயிராகும்.
இதில் அந்தந்தப் பகுதிகளின் மண், காலநிலை, பாசன வசதி மற்றும் விற்பனை வாய்ப்புக்கேற்ப தகுந்த ஊடுபயிர்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
இதன் மூலம் விவசாயிகள் விளைச்சலை அதிகரிப்பதுடன், கூடுதல் வருமானமும் பெறலாம்.
பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்வதால், நீர் மற்றும் நிலவளங்கள் நன்கு பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகும்.
வேளாண் இடுபொருட்களை திறம்பட பயன்படுத்தினால், பருத்தியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை குறைக்கலாம்.
உளுந்து போன்ற ஊடுபயிர்கள், பருத்தியின் இடைப்பட்ட பகுதிகளை அடைத்து மண்ணை மூடிவிடுவதால், களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படும்.
உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை பருத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மண்வளம் பெருகும்.
ஊடுபயிர்களிலிருந்து கூடுதல் விளைச்சல் கிடைப்பதுடன், மொத்த விளைச்சல் மற்றும் லாபம் அதிகரிக்கும்.
விவசாயிகள் உளுந்து அல்லது ஆமணக்கு போன்ற பயறுவகைப் பயிர்களை பருத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு எக்டருக்கு 8000 ரூபாய் மதிப்புள்ள பயறு விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்கள் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலும் போதுமான அளவு இருப்பு உள்ளது.
எனவே, விவசாயிகள் பருத்தியில் ஊடுபயிர்களை சாகுபடி செய்து கூடுதல் விளைச்சலுடன் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.