/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நெல் பயிர்களை அறுவடை செய்து சேதமின்றி பாதுகாக்க அறிவுறுத்தல்
/
நெல் பயிர்களை அறுவடை செய்து சேதமின்றி பாதுகாக்க அறிவுறுத்தல்
நெல் பயிர்களை அறுவடை செய்து சேதமின்றி பாதுகாக்க அறிவுறுத்தல்
நெல் பயிர்களை அறுவடை செய்து சேதமின்றி பாதுகாக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 28, 2025 05:52 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை உடன் அறுவடை செய்து மழை பாதிப்பில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;
வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருவதாலும், புயல் காரணமாகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் பயிர்களை முன்னெச்சரிக்கையாக அறுவடை செய்து பயிர் சேத பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்கள் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
மழை பாதிப்புகளால் நெல் வயலில் தண்ணீர் தேங்கி காற்றோட்டம் இல்லாமல் வேர்களின் சுவாசம் பாதிக்கப்படும்.
அப்போது நெல் பயிர்களின் வேர்களை சுற்றியுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் குறைந்து விடும். எனவே வயலில் தேங்கியுள்ள கூடுதல் நீரை உடன் வெளியேற்ற வேண்டும். வெள்ள நீர் வடிந்த பிறகு பயிரின் வளர்ச்சியை மேம்படுத்த ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.
பயிரின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால், இலை வழியாக ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
மேலும் நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், நுண்ணுாட்டங்கள், திரவ உயிரி உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு காரணிகள் போன்ற இடுபொருட்கள் மாவட்டத்தின் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறலாம்.

