/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சேருவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
/
அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சேருவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சேருவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சேருவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 06:35 AM

கள்ளக்குறிச்சி: அரசின் அனைத்து திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேருவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மலையரசன் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு துணை தலைவர் ரவிக்குமார் எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டங்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம், மின் மேம்பாட்டு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 55 திட்டப் பணிகளின் விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவு செய்யப்பட்ட நிதி, பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து அரசின் திட்ட பணிகள் குறித்து பயனாளிகள் அறிந்திடும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், நகர சேர்மன் சுப்ராயலு, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

