/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எய்ட்ஸ் நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு பேரணி
/
எய்ட்ஸ் நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 05, 2025 07:44 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்தார்.
பேரணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 317 மாணவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து, எச்.ஐ.வி. எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைத்து அவர்களுக்கான இதர சேவைகளைப் பெறுவதில் உறுதுணை செய்வேன். மேலும் அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன்.
'புதிய எய்ட்ஸ் தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவேன் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன்' என்று அனைத்து அரசு அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.