/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
/
தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 05, 2025 07:44 AM

கள்ளக்குறிச்சி; தச்சூர் அபிராமியன்னை உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக விழா விமர்சையாக நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விளைநில பகுதியில் 2 சிவலிங்க சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. உடன், சுவாமி சிலைகள் மீட்கப்பட்ட இடத்தில் அபிராமியன்னை உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் கோவில் கட்ட முடிவு செய்து கட்டுமான பணிகள் நடந்தது. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆக., 28ம் தேதி புனித நீர் எடுத்து வருதலுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. தொடர்ந்து 29ம் தேதி திருவிளக்கு பூஜை, கோ பூஜை,30ம் தேதி மகாலட்சுமி ேஹாமம், பூர்ணாஹூதி, 31ம் தேதி கால பைரவர் ேஹாமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
7 நாட்கள் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளும், ஆன்மிக சிறப்பு பட்டிமன்றமும், 7 கால யாக பூஜைகளும் நடந்தது. நேற்று முன்தினம் 63 நாயன்மார்களுக்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. நேற்று கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி திருப்பள்ளி எழுச்சி, திருமுறை பாராயணனம், 8ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராானை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 10.20 மணியளவில் 5 படி நிலைகளுடன் உள்ள ராஜ கோபுரம், மூலவர் அமிர்தகண்டேஸ்வரர், தாய் அபிராமியன்னை, பஞ்சமுக விநாயகர், முருகன், லட்சுமி ஹயக்கிரிவர், திருப்பதி வெங்கடேஸ்வரர், ராமர் பட்டாபிஷேகம், லட்சுமி, சுப்ரமணியர், சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், வராஹி, ஐயப்பன், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது.
சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபி ேஷக வழிபாடு நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.