/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
ADDED : செப் 05, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; க ள்ளக்குறிச்சியில் மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி. இவர் சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் விசாரித்து தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன கல் லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.