/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகளுக்கு நேர்முக பயிற்சி முகாம்
/
விவசாயிகளுக்கு நேர்முக பயிற்சி முகாம்
ADDED : நவ 12, 2024 10:25 PM

கள்ளக்குறிச்சி; காளசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, கால்நடை உற்பத்தி குறித்து நேர்முக பயிற்சி முகாம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பொன்விழா சுடர் நிகழ்ச்சி மற்றும் அங்கக முறையில் பயிர் சாகுபடி, கால்நடை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் புதுச்சேரி ஆகாஷ்வாணி வானொலி நிலையம் இணைந்து நடத்தியது.
வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் விமலாராணி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர் சிவக்குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி ஆகாஷ்வாணி வானொலி நிலைய உதவி இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்று பண்ணை வானொலிப் பள்ளி குறித்து சிறப்புரையாற்றினார்.
சேலம் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் இளங்கோ பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அங்கக வேளாண்மை புத்தகம் வழங்கி பேசினார்.
தொடர்ந்து பயிற்சி சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை பேராசிரியர் ஷர்மிளாபாரதி நன்றி கூறினார்.