/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்
/
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்
ADDED : பிப் 12, 2025 11:47 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும், விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. நில விவரங்களை இணைப்பதன் மூலம், அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.
வலைதளத்தில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டங்களை பெற முடியும்.
மத்திய, மாநில அரசு திட்டங்கள் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம சேவை மையம், ஊராட்சி அலுவலகம் போன்ற பகுதிகளில் நேற்ற முதல் துவங்கியது.
விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண் மற்றும் மொபைல் ஆகியவற்றுடன் இம்முகாமில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் கிராம மகளிர் திட்ட சமுதாய பணியாளர்களை தொடர்புகொண்டு பயனடையலாம்.
இத்தகவலை வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.