/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்
ADDED : அக் 13, 2025 10:56 PM
கள்ளக்குறிச்சி; எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 34 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை உதயசூரியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் சிவராமன், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் சுரேஷ்குமார் மருத்துவ குழுவினர் 69 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
தகுதிவாய்ந்த, 34 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை உதயசூரியன் எம்.எல்.ஏ., வழங்கினார். 2 மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 26 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.