/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம்
ADDED : அக் 13, 2025 10:56 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கமலகண்ணன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜன் வேலை அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
சட்ட ஆலோசகர் குமரன் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து, அட்டை வழங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. பல்வேறு சங்க நிர்வாகிகள் மகேந்திரகுமார், ஆனந்த், முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.