/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுக்காக பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார்
/
மக்களுக்காக பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார்
மக்களுக்காக பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார்
மக்களுக்காக பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார்
ADDED : அக் 10, 2024 05:57 AM

மக்களுக்கு சேவையாற்ற மகத்தான வாய்ப்பை வழங்கி இருக்கிறது ஐ.ஜே.கே., என அதன் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறினார்.
இது குறித்த அவர் கூறியதாவது:
ஐ.ஜே.கே., தலைவர்கள் பச்சமுத்து, ரவிபச்சமுத்து ஆகியோரின் வழிகாட்டுதலுடன், கட்சிப் பணியாக மட்டுமல்லாது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக கருதி கட்சிப் பணியாற்றி கொண்டிருக்கிறேன்.
கட்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எனது பொறுப்பை உணர்ந்து, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சியின் கொள்கையான சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நாட்டும் வகையில் புதிய தலைமுறை, புதிய கொள்கை, புதிய கட்சி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களிடையே பசுமை புரட்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வினாடி வினா போட்டி நடத்துவது, பரிச்சளித்து ஊக்கப்படுத்துவது என பல்வேறு நல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
சேவையின் மற்றும் ஒரு பணியாக திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ஆப் ரோட்டரி கிளப் தலைவராக பொறுப்பு வகித்து, சமூக சேவையில் இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம், மக்களின் சேவையே மகத்தான சேவையாக உணர முடிகிறது.ஐ.ஜே.கே., சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுக்கான உரிமைகளை நிலை நாட்டவும் பல போராட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இந்த அரிய பணி மன மகிழ்ச்சியை அளிக்கிறது என ஐ.ஜே.கே., விழுப்புரம், மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறினார்.

