ADDED : நவ 10, 2025 04:02 AM

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில், முகையூர் மேற்கு ஒன்றியம், மணம்பூண்டியில் திண்ணை பிரசாரம் நடந்தது.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கி, அ.தி.மு.க., ஆட்சி கால சாதனைகள் விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகையூர் மத்திய ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சந்தோஷ், திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு, அரகண்டநல்லுார் நகர செயலாளர் ராஜ்குமார் உரையாற்றினர்.
மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சுபாஷ் இளவரசன், துணைத் தலைவர் முருகதாஸ், துணை செயலாளர் ஜெய்சங்கர், வெங்கடேசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.

