/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
/
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ADDED : டிச 28, 2025 06:40 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த மாநாட்டிற்கு, மாவட்ட நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனந்தகிருஷ்ணன், அண்ணாதுரை, ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் விஜயகுமரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில், முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்படும் அநீதியை களையே வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 6ம் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ரகீம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர் .

