/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
ADDED : டிச 28, 2025 06:39 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் வசுமதி, பேரூராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தனர்.
நகர மன்ற தலைவர் முருகன் குத்து விளக்கேற்றி வைத்தார். கவுன்சிலர்கள் ஜெயந்தி முருகன், சக்தி, பிரகாஷ், உஷா வெங்கடேசன், தமிழ்வாணி அருள்பிரகாஷ், கோவிந்தராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அங்கப்பன், சுகாதார ஆய்வாளர் சங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

