ADDED : மே 13, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா தலைமை தாங்கி ஆலத்துார் குறுவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தாசில்தார் விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தலைமை நில அளவர் நந்தகோபாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் பல துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், வி.எ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.