/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள்
/
ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள்
ADDED : செப் 18, 2024 09:30 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் (ஜே.ஆர்.சி.) மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் 75வது ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு, ரெட்கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா, குழு நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிகளை சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை கீதா முன்னிலை வகித்தார். ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் மாயக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
மாவட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 261 மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டனர். ஜே.ஆர்.சி. மாவட்ட பயிற்சியாளர் ஆறுமுகம், ஆலோசகர்கள் முரளி, ரவிச்சந்தர், ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, சங்கீதா, ஜீவா ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாவட்ட இணை கன்வீனர் துரை நன்றி கூறினார்.