/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆதாய பொங்கல் விற்பனை 'ஜோர்'
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆதாய பொங்கல் விற்பனை 'ஜோர்'
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆதாய பொங்கல் விற்பனை 'ஜோர்'
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஆதாய பொங்கல் விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 09, 2024 07:24 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் நடைபெறும் ஆதாய பொங்கல் விற்பனை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மக்களின் நம்பிக்கையோடும், ஆதரவோடும் விற்பனையில் முன்னணி பெற்று வரும் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த டிசம்பர் 16 முதல் வரும் 17ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு 3,000 ரூபாய்க்கு மேல் மேல் ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை சேமித்திடும் வகையில் ஆதாய பொங்கல் ஜவுளி விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, 2 பிளவுஸ் பிட் வாங்கினால் ஒரு சில்வர் தட்டும், ஒரு காட்டன் மெட்டீரியல் வாங்கினால் சில்வர் கிண்ணமும், ஒரு சிந்தடிக் சேலை வாங்கினால் சில்வர் பாத்திரமும் வழங்கப்படுகிறது.
மேலும், 589 ரூபாய் மதிப்புள்ள ரெடிமேட் பாவாடை வாங்கினால் சில்வர் பவுலும், சிம்லா கலர் வேட்டி செட் வாங்கினால் டிராவல் பேக்கும், 500 ரூபாய் மதிப்புள்ள வேட்டி செட்டுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதிரடி ஆபர் விலையில் ஆடைகள் விற்கப்படுகிறது.
இதுதவிர ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அனைத்து ஆடைகளுக்கும் தள்ளுபடி உண்டு. பொதுமக்கள் சலுகை விலையில் ஆடைகளை வாங்கி பண்டிகையை கொண்டாடலாம். பர்னிச்சர் மற்றும் பாத்திரங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி உள்ளது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து டெக்ஸ்டைல்சுக்கு வரும் வகையில் தினமும் இலவச வாகன வசதி உள்ளது.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.