/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லை தமிழ் சங்க இலக்கிய பெருவிழா
/
கல்லை தமிழ் சங்க இலக்கிய பெருவிழா
ADDED : அக் 19, 2025 03:45 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்கத்தின் இலக்கிய பெருவிழா நடந்தது.
கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், கல்லை தமிழ் சங்க பொருளாளர் சண்முகம், பரிக்கல் சந்திரன், பேராசிரியர் தேவநேய சித்திரச்செல்வி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் நடேசமணி வரவேற்றார். வள்ளுவர் வலியுறுத்தும் அரசாட்சி என்ற தலைப்பில் சிறப்பு தலைவர் கோமுகி மணியன், திருக்குறள் அதிகாரம் அருளுடைமை குறித்து டாக்டர் உதயகுமார், நாட்டுப்புற பாடல்கள் என்ற தலைப்பில் சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் லக்குமிபதி, அகத்தில் நிறைந்த அகநானுாறு என்ற தலைப்பில் ஜெயப்பிரகாஷ், ஆசுகவியின் ஐந்து நிமிடங்கள் என்ற தலைப்பில் தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆசுகவி ஆராவமுதன் ஆகியோர் இலக்கிய சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் பொன்னப்பிள்ளை, நெடுஞ்செழியன், கோபால், அப்துல்ஹமீது உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். வட்ட வன அலுவலர் (ஓய்வு) கொளஞ்சியப்பன் நன்றி கூறினார்.