/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்; போலீசார் இல்லாததால் மக்கள் கடும் அவதி

ADDED : அக் 19, 2025 03:42 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் ஜவுளி, மளிகை, பட்டாசு வாங்குவதற்காக நேற்று திருக்கோவிலுாரில் குவிந்தனர். இதனால் வடக்கு வீதி, பஸ் நிலையம், ஐந்து முனை சந்திப்பு, கடை வீதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக வடக்கு வீதி, யூனியன் ஆபீஸ் ரோடு, கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நடந்து செல்ல கூட முடியாத அளவில் மக்கள் திக்கு முக்காடினர்.
போலீசார் ஐந்து முனை சந்திப்பு, நான்கு முனை சந்திப்பில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து இருந்தாலும், அதில் போலீசார் இல்லை. மக்கள் கூட்டத்தால் திணறிய போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் போலீசார் சிலர் மட்டுமே இருந்தனர். சட்டம் ஒழுங்கு போலீசார் அனைவரும் மாயமாகினர். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நகர வீதிகளில் இன்றும் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்க ஏதுவாக போக்குவரத்தை போலீசார் சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.