/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
/
தீபாவளி பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : அக் 19, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகை யையொட்டி புத்தாடை பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்து.
தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடை, பட்டாசு, இனிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதிற்காக, கள்ளக்குறிச்சி சுற்று வட்டார கிராம பொதுமக்கள் நகர பகுதிகளுக்கு அதிக அளவில் வருகின்றனர்.
இதனால் கள்ளக்குறிச்சி நகரில் கடை வீதி, சேலம் மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் பொதுமக்களின் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக ஜவுளி கடைகள், பட்டாசு மற்றும் மளிகை கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.