ADDED : அக் 19, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் ஏமப்பேர் அரசு பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் இல்லாத 45 மாணவ மாணவிகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலுசாமி, ரோட்டரி மாவட்ட ஆளுனர் செந்தில்குமார், மாவட்ட துணை ஆளுனர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பரிசாக புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர்கள் ஞானராஜ், பெருமாள், இம்மானுவேல் சசிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.