/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தில் 3,863 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

ADDED : டிச 31, 2024 06:50 AM

ரிஷிவந்தியம் : பாவந்துாரில் உள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
சமூக நல அலுவலர் தீபிகா, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி முதல்வர் முனியன், தமிழ்த்துறை தலைவர் சண்முகம், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, 6 - 12ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து முடித்து, தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இனி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து முடித்து, உயர் கல்வி சேர்ந்த மாணவிகளும் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறலாம். அதன்படி, மாவட்டத்தில் கூடுதலாக 189 மாணவிகள் ஊக்கத்தொகை பெறுவர்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தமாக 3,863 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மாநில திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வில், புதுமை பெண் திட்டத்தின் மூலமாக உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகள் சேர்க்கை விகிதம் 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கலெக்டர் கூறினார்.