/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணின் கண் அருகே 1 கிலோ கட்டி அகற்றம் கள்ளக்குறிச்சி அரசு டாக்டர்கள் சாதனை
/
பெண்ணின் கண் அருகே 1 கிலோ கட்டி அகற்றம் கள்ளக்குறிச்சி அரசு டாக்டர்கள் சாதனை
பெண்ணின் கண் அருகே 1 கிலோ கட்டி அகற்றம் கள்ளக்குறிச்சி அரசு டாக்டர்கள் சாதனை
பெண்ணின் கண் அருகே 1 கிலோ கட்டி அகற்றம் கள்ளக்குறிச்சி அரசு டாக்டர்கள் சாதனை
ADDED : பிப் 21, 2025 05:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், பெண் ஒருவருக்கு, கண் அருகே இருந்த ஒரு கிலோ அளவிலான கட்டியை அகற்றி சாதித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தலை சேர்ந்த 63 வயதுடைய பெண், கண்ணையொட்டி இருந்த கட்டியால் கடும் அவதிப்பட்டு வந்தார். இந்த கட்டி 1 கிலோ அளவிற்கு வளர்ந்து பெரிதானது.
பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்தும், அதிக மருத்துவ செலவினங்கள், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு. இருதய நோய் உள்ளிட்டவை, அவருடைய அறுவை சிகிச்சைக்கு தடையாக இருந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருடைய கண் அருகே இருந்த கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் பவானி கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன், பெண் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதித்த தலைமை கண் டாக்டர் நேரு, அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி விடலாம் என ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் கோபிநாத், அன்பு, தமிழ்ச்செல்வன் மற்றும் மயக்க நிபுணர் மகேந்திரவர்மன், செவிலியர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர், 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர் என, தெரிவித்தார்.
அப்போது, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, உதவி மருத்துவ கண்காணிப்பாளர் பழமலை, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி, டாக்டர்கள் கோபிநாத், தமிழ்ச்செல்வன், மகேந்திரவர்மன் மற்றும் பேராசிரியர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.