/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

ADDED : நவ 14, 2024 06:09 AM

கள்ளக்குறிச்சி: தினமலர் செய்தி எதிரொலியால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்து சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவ மாணவிகள் பலர் படிக்கின்றனர்.
கல்லுாரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரிர்களின் பொழுது போக்கு அம்சத்திற்காக, விளையாட்டில் ஈடுபடும் வகையில் கல்லுாரி எதிரே விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் சுற்றிலும் நடைபயிற்சி தளம் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானத்தில் முறையான பராமரிப்பு இன்மையால் பேஸ்கட் பால், வாலிபால் விளையாடும் இடத்தை தவிர்த்து மற்ற சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்களாக காட்சி அளித்தது.
இதனால் பாம்பு, தேள் போன்ற விஷ சந்துகள் உலாவும் நிலையால் மைதானத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகளின் புதர்கள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் கல்லுாரி மாணவர்கள் அச்சமின்றி காலை, மாலை நேரங்களில் விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையே விளையாட்டு மைதானத்தை முறையாக தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.