/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
சங்கராபுரம் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
சங்கராபுரம் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
சங்கராபுரம் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 15, 2025 09:27 PM

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கராபுரத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு, மாவட்ட காங்., துணை தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். கனரா வங்கி அருகில் இருந்து 300க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் பேரணியாக சென்று கடைவீதி மும்முனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி தலைவர்கள் பெரியசாமி, நாராயணன், வழக்கறிஞர் முகமதுபாஷா, ராஜாராம், சங்கதமிழகன், நகர தலைவர் கோவிந்தராஜ், வட்டார தலைவர்கள் பிரபு, செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் முத்தமிழ்கண்ணன், கோவிந்தன், துரைகிருஷ்ணன், பழனி, துரைசாமி, தேவேந்திரன், சுப்ரமணி, சுலைமான், ஜெகதீசன், காதர்அலி, கயும்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர் காங்., மாவட்ட தலைவர் முகமது நன்றி கூறினார்.