ADDED : ஜூலை 17, 2025 06:37 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க்கொடி தலைமை தாங்கினார். தமிழ் சங்க தலைவர் கவிதைத்தம்பி, ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சிராணி, ஊராட்சி துணை தலைவர் தனம் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். தமிழறிஞர் ஆறுமுகம் காமராஜர் உருவப்படத்தை திறந்து மலர் துாவினார். சின்னசேலம் தமிழ்ச் சங்க செயலாளர் அம்பேத்கர், ஆலோசகர்கள் முருகேசன், கோவிந்தராஜன், ராமசாமி, கண்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினர். பள்ளி மாணவர்களின் நடனம், பேச்சு, கவிதை நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.