/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கம்பன் கழக செயற்குழு கூட்டம்
/
கம்பன் கழக செயற்குழு கூட்டம்
ADDED : நவ 25, 2025 05:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட கம்பன் கழக செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நிறுவன தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். சங்க தலைவர் செல்வக்குமார், துணைத் தலைவர் கோவிந்தராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரங்கராஜன், தென்னாற்காடு மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆராவமுதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.
மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வகுமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கஸ்துாரி இளையகம்பன் வாழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர் தியாகதுருகம் கம்பன் கழக நிறுவன தலைவர் நடேசன் பேசினார்.
கூட்டத்தில் வரும் புத்தாண்டு தினத்தில் கம்பன் புகழ் பேசும் பட்டிமன்றத்தை புலவர் ராமலிங் கம் தலைமையில் நடத்த வேண்டும். 2026 பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு கம்பராமாயண பொருளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் லட்சுமிபதி, சாதிக்பாஷா, ஆனந்தி சவுந்திரராஜன். முத்தமிழ் முத்தன், தமிழரசி செந்தில்குமார், கொளஞ்சியப்பா பங்கேற்றனர். ரஞ்சித்குமார், ஜெயபிரகாஷ் நிகழ்ச்சியை ஒ ருங்கிணைத்தனர். இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

