/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கருப்பு துணியால் கண்ணை கட்டி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
கருப்பு துணியால் கண்ணை கட்டி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கருப்பு துணியால் கண்ணை கட்டி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கருப்பு துணியால் கண்ணை கட்டி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : நவ 25, 2025 05:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பொதுமக்கள், கண்ணில் கருப்பு நிற துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜி.அரியூர் கிராமத்தில் முதல் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போ லீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
மனு விபரம்:
ஜி.அரியூர் கிராமத்தில் உள்ள முதல் தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்குள்ள பொது பாதையை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தோம். இந்த பொது பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தோம். அதில், ஆக்கிரமிப்பினை 3 மாத காலத்திற்குள் அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருப்பதால் முதல் தெருவில் வசிக்கும் மக்கள் சிரமமடைந்து வருகிறோம். எனவே பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

