/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர் மின் கோபுர விளக்கு கிராம மக்கள் கோரிக்கை
/
உயர் மின் கோபுர விளக்கு கிராம மக்கள் கோரிக்கை
ADDED : நவ 25, 2025 05:01 AM

கள்ளக்குறிச்சி: பிச்சநத்தம் பிரிவு சாலையில் உயர் மின் கோபுர விளக்கு மற்றும் சி.சி.டி.வி., கேமரா அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பிச்சந்தம் கிராம மக்கள் அளித்த மனு:
பிச்சநத்தம் கிராமத்திற்குச் செல்ல வேண்டுமானால் ஆலத்துார் அருகே உள்ள அழகாபுரம் பிரிவு சாலையில் இறங்கி, 1 கி.மீ., துாரத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் அங்கு திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக் கடி நடக்கிறது. அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அழகாபுரம் - பிச்சநத்தம் பிரிவு சாலையில் உயர் மின் கோபுர விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

