/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்
/
சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்
ADDED : டிச 04, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் நேற்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் முழுவதும் 1008 தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும், நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதுபோல் கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

