/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : அக் 06, 2025 11:42 PM

ரிஷிவந்தியம்; பகண்டை கூட்ரோடு அடுத்த யால் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமங்கள், கோ பூஜை, விமான கலச பிரதிஷ்டை, மூலஸ்தானம், பரிவார பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மற்றும் மருந்து சாற்றுதலுடன் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று திருமுறை பாராயணம், நாடிசந்தானம், தத்துவார்ச்சனை ஆகியவற்றுடன் இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.