/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு
/
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு
ADDED : அக் 06, 2025 11:41 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் ஆட்டோ ஓட்டுநர் சேவை நிதி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி மாவட்ட தலைவர் அருண் தலைமையில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் துரை, நகர செயலாளர் மணிவண்ணன், துணை தலைவர்கள் அன்பு, அருள், டெம்போ ஓட்டுனர் சங்க தலைவர் செல்வம் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில்;
தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்தும், மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ராபிடோ போன்றவை வரத்து காரணமாக எங்கள் தொழில் நலிவடைந்து அனைவரும் வருமையில் வாடி வருகின்றோம். ஆந்திர அரசு எங்களை போன்றவர்களுக்கு ஆட்டோ சேவை என்ற திட்டத்தின் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.15ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. அதேபோல், தமிழகத்திலும், ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூ.15 ஆயிரம் சேவை நிதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.