/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் மார்க்கெட் வீதி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
/
திருக்கோவிலுார் மார்க்கெட் வீதி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் மார்க்கெட் வீதி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் மார்க்கெட் வீதி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 09, 2025 11:06 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார், மார்க்கெட் வீதியில் கெங்கையம்மன் மற்றும் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 6ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கலச பூஜை, யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கெங்கையம்மன், ஐயப்பன் சுவாமிகளின் மூல விமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியுடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகி விநாயகமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்தனர்.