ADDED : மே 28, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பைக் விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
உளுந்துார்பேட்டை, எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜேஷ், 36; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பைக்கில் எறையூர் அருகே சென்ற போது, சாலையில் நடந்து சென்ற அதேபகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் மீது மோதினார். இதில் கீழே விழுந்த ராஜேஷ் படுகாயம் அடைந் தார்.
இதையடுத்து அவர், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.