/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரயில் மோதி கூலி தொழிலாளி படுகாயம்
/
ரயில் மோதி கூலி தொழிலாளி படுகாயம்
ADDED : அக் 29, 2025 11:40 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ரயில் மோதி கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 50; கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 5.15 மணியளவில் இயற்கை உபாதைக்காக அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து ஜெய்பூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆறுமுகம் மீது மோதியது. இதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விருத் தாசலம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிலோமின்ராஜ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

