/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் : விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் : விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் : விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் : விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 24, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: தொடர் மழையால் சங்கராபுரம் பகுதியில் நிரம்பி வரும் ஏரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராம ஏரிகள் நிரம்பி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூட்டை, தியாகராஜபுரம், நெடுமானுார், பொய்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராம ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.