/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் புலம்பல்
/
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் புலம்பல்
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் புலம்பல்
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் புலம்பல்
ADDED : அக் 01, 2024 07:02 AM
லோக்சபா தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு இதுவரை பயணப்படி வழங்கப்படாததால் போலீசார் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதியும், தொடர்ந்து ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடந்தது.
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் ஓட்டு எண்ணிக்கை வரை பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, அரசியல் கட்சியினர் பிரசாரம், பொதுக்கூட்டம், வேட்பு மனு தாக்கல், ஓட்டு பதிவு, ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு என தொடர்ந்து 86 நாட்கள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் நிலை வரை ஒரு நாளைக்கு 200 ரூபாய் என பயணப்படி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் நாட்களுக்கான பயணப்படி தொகையை இந்திய தேர்தல் ஆணையத்தால், மொத்தமாக மாநில காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் அங்கிருந்து அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கான முழு நடவடிக்கையும் முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை போலீசாருக்கான பயணப்படி தொகை வழங்கப்படாமல் உள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மற்ற அரசு துறை அலுவலர்களுக்கு, அவர்களுக்கான தொகை வழங்கப்பட்ட நிலையில் போலீசாருக்கு மட்டும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் புலம்பி வருகின்றனர் -நமது நிருபர்-.