/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு
/
நிலம் அபகரிப்பு சார் - பதிவாளர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், 35. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்படி, சார் -- பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் சேட்டு, சேகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலி பத்திரம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.