/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 05:40 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சக்திவேல், கோட்ட தலைவர்கள் ராஜா, முகமதுஷெரீப், செயலாளர்கள் நடராஜ், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் தேவராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிற சங்க நிர்வாகிகள் ஆனந்தகிருஷ்ணன், ரவி, சாமிதுரை, வீரபுத்திரன், மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் செந்தில்முருகன் கண்டன உரையாற்றினார்.
இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் பணி குறியீட்டினை குறைத்தல், காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்புதல், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இச்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடதக்கது.

