/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கூட்டம்
/
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கூட்டம்
ADDED : செப் 28, 2025 03:50 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், சம்பவங்கள், ஆக்கிரமிப்புகள், போராட்டங்கள் குறித்து வருவாய் துறை, போலீசாரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலோசனை நடந்தது.
கடந்த மாதங்களில் நடந்த ஆய்வு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வருவாய் சட்டங்கள் கீழ் பதிவு செய்த வழக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிலுவை வழக்குகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முறையாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. எஸ்.பி.,மாதவன், டி.ஆர்.ஓ.,ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.