/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒளி அமைப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
/
ஒளி அமைப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : அக் 16, 2024 09:31 PM

சின்னசேலம்,: சின்னசேலம் கிராமத்தின் ஒளி அமைப்பின் நிறுவனரான சக்திகிரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலையில் சின்னசேலம் கிராமத்தின் ஒளி அமைப்பின் நிறுவனரான சக்திகிரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர், வி.சி., கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு விழப்புணர்வு இயக்கத்தின் மாநில செயலாளராகவும் உள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சக்திகிரிக்கு, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.