ADDED : செப் 25, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று, கை விரல் ரேகை சரி பார்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இ–கே.ஒய்.சி., எனப்படும் கை விரல் ரேகை சரிபார்ப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இ–கே.ஒய்.சி., பணி நடந்து வருகிறது.
நுாறு சதவீதம் நிறைவு செய்யும் வகையில் இன்று 26ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
