ADDED : ஏப் 23, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அக்கராயபாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் செல்வம் 32; என்பவரை கைது செய்து, 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சாமுண்டி என்பவரை தேடி வருகின்றனர்.

