ADDED : நவ 01, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில் போலீசார் சாராய சோதனை மேற்கொண்டு சாராயம் விற்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த தும்பை கிராமத்தில் உள்ள காட்டுக்கொட்டாயில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை மேற்கொண்டார்.
அப்போது அங்கு சாராயம் விற்ற கல்வராயன்மலையைச் சேர்ந்த பெரியபலாபூண்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.