/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நிதி'
/
'சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நிதி'
ADDED : மே 18, 2025 09:04 PM
கள்ளக்குறிச்சி : சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நிதி வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதியோர் குழுக்கள், மாற்றுத் திறனாளி குழுக்கள், திருநங்கைகள் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி தனிநபர்களுக்கு பொருளாதார தொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வாழ்வாதார நிதி 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி தனி நபர்கள் மற்றும் திருநங்கைகள் தனி நபர்களுக்கு வாழ்வாதார நிதியாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 24 மாதங்கள், 12 மாதங்களில் நிலையாக திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர் செயல்பாட்டு கடனாக வழங்கப்படுகிறது. எனவே, கிராமப்புறங்களைச் சேர்ந்த இது நாள் வரை சமுதாய முதலீட்டு நிதி பெறாத தகுதியுள்ள சுய உதவிகுழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி தனிநபர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தங்களது வட்டாரத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.