/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
/
லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 18, 2024 06:20 AM

கள்ளக்குறிச்சி, : தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., சமய் சிங் மீனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஓட்டுச்சாவடி மையங்களில் குடிநீர், மின் விளக்கு, சாய்தளம், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
புகார்களை உடனடியாக தேர்தல் கட்டுபாட்டு மையம் மற்றும் எனது கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், வேட்புமனு தாக்கலின் போது கடை பிடிக்க வேண்டியது. கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், ஓட்டுப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு வாகனங்களை நன்னடத்தை விதி அமலில் உள்ள வரை பயன்படுத்தக்கூடாது.
பொது மற்றும் தனியார் இடங்களில் விளம்பரங்கள் செய்யக் கூடாது என எடுத்துரைக்கப்பட்டது. விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

