/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கருட சேவையில் கரிவரதராஜ பெருமாள்
/
கருட சேவையில் கரிவரதராஜ பெருமாள்
ADDED : அக் 05, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம் செய்தனர்.